இந்தியா

உம்மன் சாண்டிக்கு எதிரான எஃப்ஐஆர்: ரத்து செய்தது கேரள உயர் நீதிமன்றம்

DIN

நில மோசடியில் ஈடுபட்டதாக கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, முன்னாள் தலைமைச் செயலர் ஈ.கே.பரத் பூஷண் உள்பட 5 பேருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டிருந்த முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் ஆட்சிக் காலத்தில் கேரளத் தலைநகர் திருவனந்தபுரம் அருகே உள்ள பட்டூரில் தனியார் நிறுவனம் கட்டடம் கட்டியதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும், கட்டடம் கட்டுவதற்காக கழிவு நீர் குழாய் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக அந்த மாநில ஊழல் தடுப்பு அமைப்பு, உம்மன் சாண்டி, அப்போதைய தலைமைச் செயலர் பரத் பூஷண் உள்பட 5 பேருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தது. தங்கள் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யுமாறு அந்த மாநில உயர் நீதிமன்றத்தில் பரத் பூஷண், அந்தக் கட்டட நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் டி.எஸ்.அசோக் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT