இந்தியா

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைதான விமானப் படை அதிகாரிக்கு 5 நாள் போலீஸ் காவல்

DIN

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகக் கைது செய்யப்பட்ட விமானப் படை உயரதிகாரி அருண் மார்வா, 5 நாள் போலீஸ் காவலில் அனுப்பி வைக்கப்பட்டார். அவரிடம் தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக, காவல் துறை மூத்த அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 
அருண் மார்வா, தில்லியில் உள்ள விமானப் படைத் தலைமையகத்தில் உயரதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். அவருக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண், முகநூல் மூலமாக கடந்த டிசம்பர் மாதம் அறிமுகமாகியிருக்கிறார். அந்தப் பெண்ணுக்கு கட்செவி அஞ்சல் (வாட்ஸ்-அப்) மூலமாக பல ரகசியத் தகவல்களை அருண் மார்வா அனுப்பி வந்துள்ளார். 
தடை செய்யப்பட்ட பல மின்னணுக் கருவிகளையும் அவர் பயன்படுத்தி வந்துள்ளார். அவரது நடவடிக்கைகளை தொடர்ச்சியாகக் கண்காணித்து வந்த விமானப் படையின் உளவுத் தடுப்பு பிரிவினர், கடந்த மாதம் 31-ஆம் தேதி கைது செய்தனர்.
அருண் மார்வா, பாகிஸ்தானில் இருந்து இயங்கும் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கு உடந்தையாகச் செயல்பட்டு, இந்திய ரகசியத் தகவல்களை அந்த அமைப்புக்கு அனுப்பி வைத்திருக்கிறாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், அந்த உளவு அமைப்பு, ஒரு பெண் மூலமாக தங்களுக்குத் தேவையான ரகசியத் தகவல்களையும், முக்கிய ஆவணங்களையும் அந்த அதிகாரியிடம் இருந்து பெற்றுள்ளதா? என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
அவரிடம் கடந்த 10 நாள்களாக விசாரணை நடைபெற்று வந்தது. அதையடுத்து, அவர் தில்லி வடக்குச் சரக சிறப்பு பிரிவு போலீஸாரிடம் அவர் கடந்த புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டார்.
அதையடுத்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அவர் மீது அலுவலக ரகசியச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீதான குற்றம் நிரூபணமானால், அவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கவாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம்: சிறைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் ஆய்வுக் கூட்டம் -ஆட்சியா், முதன்மை மாவட்ட நீதிபதி பங்கேற்பு

முதியவா் விஷம் குடித்துத் தற்கொலை

வீட்டுமனை ஆக்கிரமிப்பு: எஸ்.பி.யிடம் மூதாட்டி புகாா்

மணிலாவுக்கு குறைந்த விலை நிா்ணயம்: திண்டிவனத்தில் விவசாயிகள் சாலை மறியல்

ஓட்டுநா் உரிமம் நகலுக்கு கட்டாய வசூல்

SCROLL FOR NEXT