ஒக்கி புயல்: கேரளத்துக்கு மாதா அமிர்தானந்தமயி ரூ.2 கோடி நிவாரணம்
கேரள மாநிலத்துக்கு ஒக்கி புயல் நிவாரண நிதியாக ரூ.2 கோடியை மாதா அமிர்தானந்தமயி அளித்துள்ளார்.
கேரள மாநிலத்துக்கு ஒக்கி புயல் நிவாரண நிதியாக ரூ.2 கோடியை மாதா அமிர்தானந்தமயி அளித்துள்ளார்.
இது தொடர்பாத மாதா அமிர்தானந்தமயி மடம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மடத்தின் துணைத் தலைவரான சுவாமி அமிர்தஸ்வரூபானந்தா புரி, கேரள முதல்வர் பினராயி விஜயனை அவரது அலுவலகத்தில் திங்கள்கிழமை சந்தித்தார். அப்போது ஒக்கி புயல் நிவாரண நிதியாக ரூ.2 கோடிக்கான காசோலையை முதல்வரிடம் அளித்தார்.
முன்னதாக, ஒக்கி புயல் ஏற்பட்டபோது மாதா அமிர்தானந்தமயி மடம் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, தன்னார்வத் தொண்டர்கள் மூலம் உணவு, மருத்துவ வசதி செய்து தரப்பட்டது. உள்ளூரில் உள்ள தேவாலயங்களுடன் இணைந்து இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவ அறிவியல் கழகத்தில் புயலில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.