முகப்பு
இந்தியா

ஹைதராபாத்தில் கர்ப்பிணியை துண்டு துண்டாக வெட்டி வீசிய சம்பவம்: முதல் துப்பு துலங்கியது

நிறைமாத கர்ப்பிணியைக் கொன்று துண்டு துண்டாக வெட்டி சாலையோரத்தில் வீசிய குற்றவாளிகள் இரு சக்கர வாகனத்தில் வரும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:13 PM
பகிர்:


ஹைதராபாத்: நிறைமாத கர்ப்பிணியைக் கொன்று துண்டு துண்டாக வெட்டி சாலையோரத்தில் வீசிய குற்றவாளிகள் இரு சக்கர வாகனத்தில் வரும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

மஸ்ஜித் பான்டா சாலையில், ஒரு பெண் உட்பட இரண்டு பேர் மிகக் கனமான பையை இரு சக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு ஓட்டிச் செல்லும் காட்சியை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

பொடானிகல் கார்டன் பகுதிக்கு அருகே சாலையோரத்தில் கர்பிணிப் பெண்ணின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டு இரண்டு வாரங்கள் ஆன நிலையில், குற்றவாளிகள் பற்றி இதுவரை எந்த துப்பும் கிடைக்காத நிலையில், இந்த சிசிடிவி காட்சிகள் காவல்துறைக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.

மிகக் கனமான பையுடன் இரண்டு பேர் பைக்கில் செல்கிறார்கள். இதில், பின் இருக்கையில் இருக்கும் பெண் அந்த பையை கையில் பிடித்துள்ளார். 

கிடைத்திருக்கும் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, கொலைச் சம்பவம் சித்திக் நகர் அல்லது அஞ்ஜையா நகரில் நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. பொடானிகல் கார்டன் பகுதியில் அதிகாலை 3.42 மணிக்கு அந்த உடல் வீசப்படுகிறது. 3.48 மணிக்கு அந்த பைக் மஸ்ஜித் பான்டா சாலையைக் கடந்து செல்கிறது. 

கர்பிணியின் உடல் சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்டதால், அவரது அடையாளத்தை காண்பதில் சிக்கல் நீடிக்கிறது. அவரது உறவினர்கள் கூட அவரது உடலை அடையாளம் காண முடியாது என்பதால் அவரது டிஎன்ஏவும், அவரது வயிற்றில் இருந்த கருவும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள்.

கொலையுண்ட பெண் மரணம் அடைவதற்கு 2 நாட்களுக்கு முன்பு அதாவது ஜனவரி 28ம் தேதி கச்சிபௌலியில் உள்ள உடுப்பி ஹோட்டலுக்கு வந்து சென்றதாக நேரில் பார்த்தவர்கள் அடையாளம் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கொலையுண்ட பெண்ணின் மாதிரிப் புகைப்படத்தை வெளியிட்டிருக்கும் காவல்துறை, இவரைப் பற்றி தகவல் கொடுக்குமாறு பொதுமக்களுக்கு வலியுறுத்தியிருப்பதோடு, குற்றவாளிகளைப் பற்றி தகவல் அளிப்போருக்கு சன்மானமும் அறிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →