படித்த இளைஞர்களை பக்கோடா விற்க செய்வதே பாஜகவின் கனவு: கேஜரிவால் தாக்கு
படித்த இளைஞர்களை பக்கோடா விற்க செய்வதே பாஜகவின் கனவு என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சாடியுள்ளார்.
படித்த இளைஞர்களை பக்கோடா விற்க செய்வதே பாஜகவின் கனவு என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சாடியுள்ளார்.
பக்கோடா விற்பதுகூட ஒருவிதமான வேலைவாய்ப்புதான் என்று பிரதமர் மோடி தெரிவித்த கருத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
நாட்டின் பல்வேறு இடங்களில் பட்டமளிப்பு ஆடை அணிந்து கொண்டு, பக்கோடா தயாரிக்கும் போராட்டத்தை எதிர்க்கட்சியினர் முன்னெடுத்து வருகின்றனர்.
இதனிடையே, இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக தலைவர் அமித் ஷா மாநிலங்களவையில் கடந்த திங்கள்கிழமை பேசினார்.
அப்போது பக்கோடா விற்பது ஒன்றும் தேசத்தில் அவமானகரமான செயல் அல்ல என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சுட்டுரையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:
மக்களுக்கு சிறந்த கல்வியை அளித்து மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்குரைஞர்கள் ஆகியோரை ஆம் ஆத்மி கட்சி உருவாக்கி வருகிறது.
ஆனால், மக்களை எழுத்தறிவில்லாதவர்களாக வைக்கவும், பக்கோடா விற்கச் செய்வதுமே பாஜகவின் கனவாக உள்ளது என்று கேஜரிவால் தெரிவித்துள்ளார்.