இந்தியா

பலாத்காரம் உள்ளிட்ட எந்த வழக்கில் இருந்தும் விடுவிக்க முடியாது: நித்யானந்தாவுக்கு நீதிமன்றம் பதில்

DIN


நித்யானந்தா மீதான பலாத்கார வழக்கு உட்பட எந்த வழக்கில் இருந்தும் அவரை இருந்து விடுவிக்க முடியாது என்று கர்நாடக நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பலாத்கார வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி நித்யானந்தா உட்பட 5 பேர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நித்யானந்தாவுக்கு எதிரான வழக்குகள் மீது பிப்ரவரி 28ம் தேதி முதல் விசாரணை தொடங்கும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

ஆர்த்தி ராவ் என்பவரை நித்யானந்தா பலாத்காரம் செய்ததாக நித்யானந்தாவுக்கு உதவியாளராக இருந்த லெனின் வழக்கு தொடர்ந்தார். பிடதி ஆசிரமத்தில் உதவியாளராக இருந்தவர் லெனின். இவர் அளித்த புகாரில்,  கடந்த 2005ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டுவரை பலாத்காரம் நடந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கில், தாம் 5 வயதுக்குரிய உடல்நிலையோடு இருப்பதாக நித்யானந்தா சார்பில் பதில் மனுவும், மருத்துவர் சான்றிதழும் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, தன்னை பலாத்கார வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி நித்யானந்தா  உட்பட 5 பேரின் கோரிக்கை மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT