இந்தியா

பி.என்.பி வங்கி மோசடி குறித்து சிறப்பு விசாரணைக் குழு கோரி மனு: விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்! 

DIN

புதுதில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கி பண முறைகேடு தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுக்களை வெள்ளிக்கிழமை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை ஒன்றில் ரூ.11800 கோடி மதிப்பிலான பண மோசடி நடந்து உள்ளது கண்டறியப்பட்டது. மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி  நிரவ் மோடியின் நிறுவனம் இந்த மோசடியில் ஈடுபட்டு இருப்பதாக வங்கி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இது தொடர்பாக சி.பி.ஐ.யிடமும் புகார் அளிக்கப்பட்டது.

சிபிஐ இதுதொடர்பாக வங்கி அதிகாரிகளையும் நிரவ் மோடியின் நிறுவன அலுவலர்கள் மூவரையும் கைது செய்துள்ளது. ஆனால் ஜனவரி மாத துவக்கத்திலேயே நிரவ் மோடி வெளிநாட்டுக்கு குடும்பத்துடன் தப்பி ஓடியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு இந்திய விசாரணை முகமைகள் மூலம் நிரவ் மோடியை இந்தியா அழைத்து வரும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன..

இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு குறித்து சிறப்பு புலனய்வு குழு (எஸ்.ஐ.டி) அமைத்து விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் இரண்டு பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை வெள்ளிக்கிழமை விசாரிப்பதாக உச்ச  நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

SCROLL FOR NEXT