இந்தியா

ரோட்டாமாக் நிறுவனத் தலைவர் விக்ரம் கோத்தாரி, அவரது மகனுக்கு 11 நாள் சிபிஐ காவல்

DIN


வங்கிகளில் ரூ.3,695 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ரோட்டோமாக் நிறுவனத்தின் தலைவர் விக்ரம் கோத்தாரி, அவரது மகன் ராகுல் ஆகியோரை 11 நாள்கள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விக்ரம் கோத்தாரி மற்றும் அவரது மகன் ராகுலை 11 நாள்கள் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரணை நடத்த சிபிஐக்கு, லக்னௌவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் செயல்பட்டு வரும் ரோட்டோமாக் பேனா நிறுவனத்தின் தலைவர் விக்ரம் கோத்தாரி. இவர், வங்கிகளில் கடன் வாங்கி விட்டு, திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்திருப்பதாக பரோடா வங்கி நிர்வாகம், சிபிஐயிடம் அண்மையில் புகார் அளித்தது. அதனடிப்படையில் சிபிஐ விசாரணையைத் தொடங்கியது. முதலில் அவர், ரூ.800 கோடி மோசடி செய்ததாக மதிப்பிடப்பட்டது. அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், பல்வேறு தகவல்கள் வெளியாகின.

பேங்க் ஆஃப் இந்தியா (ரூ.754.77கோடி), பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா (ரூ.49.82 கோடி), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ரூ.771.07 கோடி), யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (ரூ.458.95 கோடி), அலாகாபாத் வங்கி (ரூ.330.68 கோடி), ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் (ரூ.97.47 கோடி), பேங்க் ஆஃப் பரோடா (ரூ.456.63 கோடி) ஆகிய 7 வங்கிகளில் அவர் ரூ.2,919 கோடி கடன் பெற்றதும், அதைத் திருப்பிச் செலுத்தாததால், தற்போது, வட்டியும், அசலுமாகச் சேர்த்து ரூ.3,695 கோடி கடன் ஏய்ப்பு செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. 

இதையடுத்து, விக்ரம் கோத்தாரி, அவரது மனைவி சாதனா கோத்தாரி, மகன் ராகுல் கோத்தாரி மற்றும் வங்கி அதிகாரிகள் சிலர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து, விக்ரம் கோத்தாரி, மகன் ராகுல் கோத்தாரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT