இந்தியா

வந்தாச்சு இலவச சேனல்கள்: ரிலையன்ஸ் பிக் டிவி அறிமுகம்

Raghavendran

ரிலையன்ஸ் பிக் டிவி, 1 வருடத்துக்கு இலவச சேனல்கள் மற்றும் செட்டாப் பாக்ஸ் வழங்குவதாக அதிரடியாக அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் பிக் டிவி நிறுவனத்தின் இந்த அதிரடி அறிவிப்பு குறித்து அதன் நிர்வாக இயக்குநர் விஜேந்தர் சிங் கூறியதாவது:

ரிலையன்ஸ் பிக் டிவி இந்தியர்களின் பொழுதுபோக்கு அம்சத்தின் ஒரு புதிய சரித்திரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இன்று முதல் உங்களின் பொழுதுபோக்கு முற்றிலும் இலவசமாகிறது.

இனி ஒவ்வொரு இந்தியர்களின் இல்லங்களிலும் உயர்தர ஹெச்டி தொழில்நுட்பத்துடன் கூடிய சேனல்கள் மற்றும் மாணவர்களுக்குத் தேவையான கல்வி சம்பந்தப்பட்ட தொகுப்புகள் ஆகியவற்றை வீட்டில் இருந்தபடியே இலவசமாக பெற முடியும்.

இதற்காக ஒரு வருடத்துக்கு அனைத்து சேனல்கள், ஹெச்டி சேனல்கள் மற்றும் ஹெச்டி ஹெச்ஈவீசி தொழில்நுட்பம் கொண்ட செட்டாப் பாக்ஸ் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் ஃப்ரீ டு ஏர் (எஃப்டிஏ) வகையிலான 500 சேனல்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.

இது பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை மேம்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாா்: சாட்சியங்களிடம் விரைவில் போலீஸாா் விசாரணை

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

SCROLL FOR NEXT