இந்தியா

அரசு விளம்பரத்தில் மனைவியுடன் ஆடிப்பாடும் மஹாராஷ்ட்ர முதல்வர்: காங்கிரஸ் எழுப்பும் கேள்விகள்! (விடியோ) 

DIN

மும்பை: நதிகள் புனரமைப்பு தொடர்பான அரசு விளம்பரத்தில் மனைவியுடன் மஹாராஷ்ட்ரா முதல்வர் ஆடிப்பாடும் காட்சிகளுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து கேள்விகள் எழுப்பியுள்ளது.

சில வருடங்களுக்கு முன்பாக மும்பை நகரைச் சுற்றி மிதி, பாய்சர் தகிசார் மற்றும் ஓசிவாரா என 4 நதிகள் பாய்ந்து வந்தன. ஆனால் காலப்போக்கில் கட்டிடங்கள், குடியிருப்புகள் பெருகப் பெருக நதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு குறுகி விட்டன.

இதன் விளைவாக மும்பையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து நதிகளை புனரமைப்பு செய்வது தொடர்பாக மஹாராஷ்ர மாநில அரசு சார்பில் விழிப்புணர்வு பிரசார வீடியோ தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக தனியார் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு அந்த விளமபரப்படம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதில் நதிகள் பின்னணியில் மாநில முதல்வர் தேவேந்திர பட்நவீசின் மனைவி அம்ருதா பட்நவீஸ் நளினமாக பாடி  நடனமாடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

அத்துடன் அவரோடு முதல்வர் தேவேந்திர பட்நவீஸ், நிதி அமைச்சர் சுதிர்முகந்திவார், மும்பை மாநகராட்சி தலைவர் அஜய் மேத்தா, மும்பை மாநகர காவல்துறை ஆணையர் தத்தா பட்சல் சிகர் ஆகியோரும் விழிப்புணர்வு பாடல் விடியோ காட்சியில் இடம் பெற்றுள்ளனர்.

இந்த விழிப்புணர்வு விடியோவுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சச்சின் சவந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அரசு விளம்பரம் ஒன்றில் முதல்முறையாக மாநில முதல்வரின் மனைவி மற்றும் அதிகாரிகள் பாடி நடனமாடி நடித்து இருக்கிறார்கள். இதற்காக தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் இதில் நடித்ததற்காக முதல்வர் மற்றும் அதிகாரிகள் சம்பளம் பெற்று இருக்கிறார்கள்.

அவர்களுக்கு இந்த தொகையை வழங்கியது யார் என்பது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும். தனியார் தயாரிப்பு என்றால் அதில் அதிகாரிகள் நடித்தது ஏன்? அவர்களை நடிக்க ஒப்பந்தம் செய்தது யார்? என்பது தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விடியோ:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT