இந்தியா

மாநில அரசுகளின் மதிய உணவுத் திட்டத்தில் பால்: மத்திய வேளாண் அமைச்சகம் அறிவுறுத்தல்! 

நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அரசின் சார்பாக குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தில், இனி பாலையும் சேர்த்துக் கொள்ளுமாறு மத்திய வேளாண் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

DIN

புதுதில்லி: நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அரசின் சார்பாக குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தில், இனி பாலையும் சேர்த்துக் கொள்ளுமாறு மத்திய வேளாண் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மத்திய வேளாண் அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

தற்பொழுது அந்த சத்துணவில் ஊட்டச்சத்து அளவினை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. எனவே இனி குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தில், பாலையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அந்த அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடிதத்தில் இது வெறும் அறிவிப்பாகவே கூறப்பட்டுள்ளது. எனவே இதனை மாநில அரசுகள் எப்பொழுது செயல்படுத்தும் என்று தெரியவில்லை   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணிநேரம் சென்னை, புறநகரில் மழை!

மாணவ, மாணவிகளுக்கு எழுதுபொருள்கள் அளிப்பு

நாட்டு நலப் பணி திட்ட சிறப்பு முகாம் நிறைவு

நெமிலி பாலா பீடத்தில் நவராத்திரி இன்னிசை விழா நிறைவு

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT