இந்தியா

பிகார் முதல்வர் மற்றும் அவரது பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல்

Raghavendran

பிகார் முதல்வர் நிதீஷ் குமார், அம்மாநிலத்தில் உள்ள நந்தன் கிராமத்துக்கு கட்டமைப்பு மற்றும் திட்டப் பணிகளின் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்ய வெள்ளிக்கிழமை நேரில் சென்றார்.

அப்போது, அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் நிதீஷ் குமார் மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்களின் மீது திடீரென கல்வீசி தாக்கினர்.

இதனால் பாதுகாப்புப் படை வீரர்கள் இருவருக்கு காயம் ஏற்பட்டது. இந்நிலையில், பிகார் முதல்வர் நிதீஷ் குமார், பலத்த பாதுகாப்புடன் பத்திரமாக அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார். 

இதற்கிடையில் பிகார் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் அரசின் திட்டப்பணிகள், கட்டமைப்பு வசதிகள் உள்ளிடவைகளின் தற்போதைய நிலை குறித்து மாநிலம் முழுவதும் டிசம்பர் 12-ந் தேதி முதல் முதல்வர் நிதீஷ் குமார், நேரில் சென்று ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

முஸ்லிம்களை ‘பகடைக்காயாக’ காங்கிரஸ் பயன்படுத்துகிறது: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT