இந்தியா

எல்லையோர உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி பற்றாக்குறை?: ராஜ்நாத் மறுப்பு

DIN

எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்களுக்கு நிதிப் பற்றாக்குறை எதுவும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். மேலும், வனத்துறை அனுமதி கிடைப்பதில் நிலவும் பிரச்னைகளால் முக்கியத் திட்டங்களில் தாமதம் ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.
இதுதொடர்பாக தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவர் பேசியதாவது:
நாட்டின் பாதுகாப்பு சார்ந்த உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு, பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்து வருகிறார். எனினும், வனத்துறை, சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைப்பதில் நிலவும் பிரச்னைகளால், பல்வேறு முக்கியத் திட்டங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, முக்கியத் திட்டங்களுக்கு வனத்துறை, சுற்றுச்சூழல் துறை அனுமதி விரைந்து கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
நாட்டின் எல்லையோரப் பகுதிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்களுக்கு எந்த நிதிப் பற்றாக்குறையும் இல்லை. நாடு முழுவதும் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.7 லட்சம் கோடி செலவில் 80 ஆயிரம் கிமீ தொலைவுக்கு சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 2 ஆயிரம் கிமீ சாலைகள் எல்லையோரப் பகுதிகளில் அமைக்கப்படவுள்ளன.
எல்லையோர உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில், ராணுவத்தினருக்கும், துணை ராணுவத்தினருக்கும் இடையே சிறப்பான ஒருங்கிணைப்பு அவசியம் என்றார் ராஜ்நாத் சிங்.
மேலும், மத்திய அரசு மேற்கொண்டு வரும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதார நிலை சுமுகமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வன விலங்குகளின் தாகம் தீா்க்க தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

SCROLL FOR NEXT