இந்தியா

பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயார்: மத்திய அமைச்சர் பாம்ரே

DIN

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து அத்துமீறித் தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தான் படையினருக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் இருப்பதாக பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சுபாஷ் பாம்ரே தெரிவித்தார்.
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் உள்பட 3 பேர் உயிரிழந்துவிட்ட நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதுகுறித்து தில்லியில் பாம்ரே செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
நமது ராணுவ வீரர்களுக்கு எது செய்ய வேண்டும் என்பது குறித்து தெரியும். மத்திய அரசு இதை தீவிரமான பிரச்னையாக கருதுகிறது. நமது பாதுகாப்புப் படைகளும் தயார் நிலையில் இருக்கின்றன. பாகிஸ்தான் படையினருக்கு நமது வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.
எத்தகைய சவாலை எதிர்கொள்ளவும் ராணுவம் தயார். தாய்நாட்டின் நலனைக் காக்கும் திறன், இந்திய ராணுவத்திடம் உள்ளது. அதேநேரத்தில், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும். ஆனால், துரதிருஷ்டவசமாக அவர்கள் (பாகிஸ்தான்) அதைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
சிக்கிம் எல்லையில் உள்ள டோக்கா லாமில் இந்திய, சீன துருப்புகளிடையே கடந்த ஆண்டு நீடித்த முற்றுகை முடிவுக்கு வந்தது, நமது தலைமைக்கு கிடைத்த வெற்றியாகும் என்று பாம்ரே கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT