இந்தியா

சிம்லா பனிச்சறுக்குத் திருவிழா கோலாகலம்

Raghavendran

நாடு முழுவதும் இம்முறை கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் பெரும்பாலான மாநிலங்களில் பகல் நேரங்களிலும் வெளிச்சம் மங்கி பனி சூழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த பனிக்காலத்தை போற்றும் விதமாக ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவில் பனிச்சறுக்குத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதனைக் காண அங்கு அதிகளவிலான மக்கள் கூடுவார்கள்.

இது அங்குள்ள புகழ்பெற்ற பாரம்பரியமான இடத்தில் நடைபெறுவது வாடிக்கை. இங்கு கடந்த சில ஆண்டுகளாகவே ஏற்பட்ட வானிலை மாற்றங்களால் இத்திருவிழாவை நடத்துவதில் சிக்கல் நீடித்து வந்தது.

இந்நிலையில், சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு பாரம்பரியமிக்க இந்த பனிச்சறுக்குத் திருவிழா இம்முறை நடத்தப்பட்டுள்ளது. மேலும் எப்போதுமே வருடப்பிறப்பை முன்னிட்டு நடத்தப்படும் இத்திருவிழா சில நாட்களுக்குப் பிறகு நடந்துள்ளது. 

இருந்தாலும் அப்பகுதி மக்களும் பனிச்சறுக்கு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பார்வையாளர்கள் ஆகியோர் இதில் உற்சாகத்துடன் கலந்துகொண்டு கொண்டாடினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்னமராவதி அருகே கோயில் குடமுழுக்கு விழா

பெருமானேந்தல் ஸ்ரீதா்ம முனீஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு

தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 48 பேருக்கு ரூ.2.53 கோடி மானியம்

காளியம்மன், பகவதியம்மன் கோயில் குடமுழுக்கு

செவல்பட்டியில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

SCROLL FOR NEXT