இந்தியா

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனத்தின் 'குடியரசு தினப் பரிசு' என்னவென்று தெரியுமா?

DIN

சென்னை: குடியரசு தினத்தினை முன்னிட்டு ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகைகளை 'குடியரசு தினப் பரிசாக' அறிவித்துள்ளது.

தொலைத்தொடர்பு சேவைத்துறையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வருகைக்கு பிறகு இதர மொபைல் போன் சேவை நிறுவனங்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.  அதற்காக நிறுவனங்கள்  போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கி வருகின்றன.

சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியது. இதற்கு போட்டியாக, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் குடியரசு தினத்தினை முன்னிட்டு ஜியோ வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை 'குடியரசு தினப் பரிசாக' அறிவித்துள்ளது.

அதன்படி பல்வேறு திட்டங்களில் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்பட்ட நிலையில் தற்சமயம் 1.5 ஜிபி டேட்டாவும், தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்பட்ட திட்டங்களில் தற்சமயம் தினமும் 2 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது.

அதன்படி 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ. 149 திட்டம், 70 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ. 349 திட்டம், 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ. 399 திட்டம்  மற்றும் 91 நாட்கள் வேலிடிட்டி கொண்ட 449 திட்டம் ஆகியவற்றின் கீழ் தற்போது வழங்கப்பட்டு வரும் தினசரி ஒரு ஜிபி டேட்டாவுக்குப் பதில் இனி 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படும்

அதுபோலேவே 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ. 198 திட்டம், 70 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ. 398 திட்டம், 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ. 348 திட்டம், 91  நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ. 498 திட்டம் ஆகியவற்றின் கீழ் தற்போது வழங்கப்படும் 1.5 ஜிபி டேட்டாவுக்கு பதில் இனி 2ஜி டேட்டா வழங்கப்படும்.

இவற்றுடன் ரூ.98 மதிப்புள்ள புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் 28 நாட்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகைகள் எல்லாம் குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதி முதல் அமலுக்கு வரும் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT