இந்தியா

சிறைவாசிகளுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் இடையே நடக்கவுள்ள  வித்தியாசமான கால்பந்து போட்டி!

இந்தியாவின் புகழ்பெற்ற திஹார் சிறையில் சிறைவாசிகளுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் இடையே  வித்தியாசமான கால்பந்து போட்டி ஒன்று நடக்கவுள்ளது.

IANS

புதுதில்லி: இந்தியாவின் புகழ்பெற்ற திஹார் சிறையில் சிறைவாசிகளுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் இடையே  வித்தியாசமான கால்பந்து போட்டி ஒன்று நடக்கவுள்ளது.

தில்லியில் உள்ள திஹார் சிறை இந்தியாவின் புகழ்பெற்ற சிறைச்சாலைகளில் ஒன்று. கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்த சிறை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திஹார் சிறைவாசிகளுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் இடையே  வித்தியாசமான கால்பந்து போட்டி ஒன்றை,ஞாயிற்றுக்கிழமை அன்று நடத்த சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மத்திய விளையாட்டுத்துறையின் "கேலோ இந்தியா அபியான்" திட்டத்தின் கீழ் நடத்தப்பட உள்ள இந்த போட்டிகான் ஏற்பாடுகளை தில்லி கால்பந்துக் கழகம் சேர்ந்து செய்துள்ளது.

"சத்பவன கண்காட்சி கால்பந்து போட்டி" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த போட்டியானது ஒரு முன்மாதிரியாக அமைவதுடன், சிறைவாசிகள் அவர்தம் குடும்பங்களுடன் வலிமையான பிணைப்பினை உருவாக்கிக் கொள்ளவும், விளையாட்டின் மூலம் சிறப்பான தகவல் தொடர்புக்கும் உதவும் என்று சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனல் பறக்கும் கலைப்படைப்பு... பைசன் படத்தைப் புகழ்ந்த தயாரிப்பாளர்!

நான் பார்த்த மிகச் சிறந்த டெஸ்ட் தொடர் இதுதான்: இங்கிலாந்து பயிற்சியாளர்

தங்கம் ரூ.800 உயர்ந்த நிலையில் வெள்ளி கிலோவுக்கு ரூ.2,000ஆக உயர்வு!

சிபு சோரன் உடல் சொந்த ஊரில் தகனம்: லட்சக்கணக்கானோர் அஞ்சலி!

பங்கஜ் திரிபாதி மீது காதல்... மனம் திறந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா!

SCROLL FOR NEXT