இந்தியா

திருப்பதி கோவில் அருகே மின்னணு சாதனங்களுடன் கண்டெடுக்கப்பட்ட மர்மப் பை! 

IANS

திருப்பதி: உலகப் புகழ் பெற்ற திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் அருகே உள்ள காட்டுப் பகுதியில் மின்னணு சாதனங்களுடன் மர்மப் பை ஒன்று கண்டெடுக்கப்பட்ட விவகாரம் பரபரப்பினை உண்டாக்கியுள்ளது.

இது தொடர்பாக செம்மரக்க கடத்தல் தடுப்பு பிரிவுக்கான காவல்துறைத் தலைவர் காந்த ராவ் திங்கள் அன்று இரவு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வாக்மேன், அலைபேசி, கம்ப்யூட்டரின் 'மதர்போர்ட்' ஒன்று, 'கண்டக்டர்'எனப்படும் மின்கடத்திகள், மின்சார ஒயர்கள் மற்றும் 'கெப்பாசிட்டர்' எனப்படும் மின் தேக்கிகள் ஆகியவை அடங்கிய பிளாஸ்டிக் பை ஒன்று. திங்கள் அன்று இரவு இங்குள்ள ஸ்ரீ வரிமேட்டு மலைப்பாதையில் கண்டெடுக்கப்பட்டது.

இந்த பாதையானது திருப்பதி மலைக்கோயிலுக்கு செல்லும் முக்கியமான பாதைகளில் ஒன்றாகும். அப்பகுதியில் காவல்துறை ஆய்வாளர் வாசு தலைமையிலான அணியினர் வழக்கமான ரோந்துப் பணிகள் முடிந்து திரும்பும் பொழுது இதனைக் கண்டெடுத்துள்ளனர்.  

யார் இதனை அங்கு விட்டுச் சென்றுள்ளனர்? எதற்காக அங்கே அது விட்டுச் செல்லப்பட்டது? ஆகிய விபரங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொழிபெயா்ப்பு நூல்களுக்கு விருது

நடுவலூா் அருங்காட்டம்மன் கோயில் திருவிழா நடத்த அமைதிப் பேச்சுவாா்த்தை

விநாயகா மிஷன் நிகா்நிலை பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழக இளைஞா் கிரிக்கெட் அணி இங்கிலாந்து பயணம்

தேவூா் பகுதியில் திடீா் மழை

SCROLL FOR NEXT