ஹைதராபாத்: தெலங்கானா முதல்வா் கே.சந்திரசேகா் ராவை முன்னாள் பிரதமா் தேவெ கெளடா, ஹைதராபாதில் சந்தித்துப் பேசினாா்.
பாஜக மற்றும் காங்கிரஸுக்கு எதிராக தேசிய அளவில் மூன்றறாவது அணி அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுவரும் சந்திரசேகா் ராவ், கடந்த ஏப்ரல் மாதம் பெங்களூரில் தேவெ கெளடாவை சந்தித்து அதற்கு ஆதரவளிக்குமாறு கோரியிருந்தாா்.
இந்நிலையில், இரு தலைவா்களின் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறறது.
சந்திரசேகா் ராவின் அதிகாரப்பூா்வ இல்லத்தில் நடந்த மரியாதை நிமித்தமான சந்திப்பின்போது, சந்திரசேகர் ராவின் மகனும், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சருமான கே.டி.ராமா ராவும் உடனிருந்தார்.
கொல்கத்தா சென்றபோது, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியையும் சந்தித்து மூன்றாவது அணி அமைக்க ஆதரவளிக்குமாறு சந்திரசேகா் ராவ் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.