இந்தியா

குழந்தைகளை கொன்று தின்றதாக அஸ்ஸாம் மாநிலத்தவர் இருவர் மணிப்பூரில் கைது 

சிறு குழந்தைகளை கொன்று தின்றதாக அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த இருவர் மணிப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

IANS

இம்பால்: சிறு குழந்தைகளை கொன்று தின்றதாக அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த இருவர் மணிப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மணிப்பூரின் சைகுல் கிராமத்தில் கடந்த சிலநாடகளாக சிறு குழநதைகள் மர்மமான முறையில் காணாமல்  போனதால் பதற்றம் நிலவி வந்தது. இந்நிலையில் செவ்வாய் அன்று கிராமத்தில் சந்தேகத்துக்கிடமான  வகையில் சுற்றித் திரிந்த  அஸ்ஸாம் மாநிலத்தவர் இருவரை கிராம மக்கள் பிடித்து அடித்து உதைத்தனர். பின்னர் அவர்கள் இருவரும் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.

போலீசாரின் ஆரமப கட்ட விசாரணையில் அவர்கள் இதுவரை ஆறு குழந்தைகளை கடத்திக் கொன்றுள்ளது தெரிய வந்தது. அத்துடன் இறந்த குழநதைகளை சமைத்து தின்றதையும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

அத்துடன் அவர்கள் அஸ்ஸாமைச் சேர்ந்த ஆறு நபர்களைக் கொண்ட குழுவாக செயல்பட்டதும்,  பயங்கர ஆயுதங்களை வைத்திருந்ததும் தெரிய வந்தது. மேலும் அவர்கள் கூலிப்படையாகச் செயல்பட்டதும் விசாரணையில் வெளிச்சதிற்கு வந்ததது.

அவர்களில்  நான்கு பேர் தப்பித்து விட்ட நிலையில், அவர்களைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT