தேசிய கீதத்தை அவமதித்த காஷ்மீர் பல்கலை., மாணவர்கள்: வைரலாகும் சர்ச்சை விடியோ
பட்டமளிப்பு நிகழ்ச்சியில் தேசிய கீதம் ஒலித்த பொழுது அதனை அவமதிக்கும் விதமாக, காஷ்மீர் பல்கலை., மாணவர்கள் சிலர் இருக்கையில் அமர்ந்திருந்த விடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
ஸ்ரீநகர்: பட்டமளிப்பு நிகழ்ச்சியில் தேசிய கீதம் ஒலித்த பொழுது அதனை அவமதிக்கும் விதமாக, காஷ்மீர் பல்கலை., மாணவர்கள் சிலர் இருக்கையில் அமர்ந்திருந்த விடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஷேர்-இ-காஷ்மீர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா கடந்த 4-ஆம் தேதி நடைபெற்றது. பட்டமளிப்பு நிகழ்ச்சி முடிந்தவுடன் வழக்கம் போல் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது.
அப்பொழுது பெரும்பாலான மாணவர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.ஆனால் ஒரு சில மாணவர்கள் தங்கள் இருக்கையிலேயே அமர்ந்திருந்தனர். அவர்களது நடவடிக்கை பலத்த சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது. அப்பொழுது எடுக்கப்பட்ட விடியோ ஒன்று இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. சில மாணவர்களின் இத்தகைய செயலுக்கு பலத்த கண்டங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.