இந்தியா

வீட்டுக்கு வீடு ரேஷன் பொருட்கள் சப்ளை: புதிய திட்டத்திற்கு தில்லி மாநில அரசு ஒப்புதல்

வீட்டுக்கு வீடு ரேஷன் பொருட்களை நேரடியாக சப்ளை செய்யும் புதிய திட்டத்திற்கு தில்லி மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

IANS

புதுதில்லி: வீட்டுக்கு வீடு ரேஷன் பொருட்களை நேரடியாக சப்ளை செய்யும் புதிய திட்டத்திற்கு தில்லி மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்களை பொதுமக்களுக்கு நேரடியாக வீட்டில் சப்ளை செய்யும் திட்டத்தினை செயல்படுத்த தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு முயற்சித்து வந்தது.ஆனால் மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் அணில் பைஜால் மற்றும் மத்திய அரசிடம் இருந்து இதற்கான உரிய ஒத்துழைப்பு அவருக்கு கிடைக்கவில்லை. இதுதொடர்பாக கடும் மோதல் நிலவி வந்தது.

இந்நிலையில் வீட்டுக்கு வீடு ரேஷன் பொருட்களை மாநில உணவுத்துறை மூலம் நேரடியாக சப்ளை செய்யும் புதிய திட்டத்திற்கு தில்லி மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடர்பாக மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

ரேஷன் பொருட்களை நேரடியாக வீட்டிலேயே சப்ளை செய்யும் திட்டதிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது . இந்த திட்டத்திற்கான அனைத்து எதிர்ப்புகளையும் எதிர்த்தே இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் நடைமுறை தொடர்பாக தினமும் எனக்குத் தகவல் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான மோதல் தொடரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் முதல்வர் கேஜரிவால் ஆளுநர் பைஜாலை வெள்ளி மாலை 3 மணிக்கு சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வலியுறுத்தல்

நெப்பத்தூா் தீவுப் பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

சட்டைநாதா் சுவாமி கோயிலில் சிறப்பு கோ பூஜை வழிபாடு

கொள்ளிடம் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

திருவாரூா் மாவட்டத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT