முகப்பு
இந்தியா

உன்னாவ் பாலியல் வழக்கு: 3 போலீஸார் உட்பட 10 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

உன்னாவ் பாலியல் வழக்கில் 3 போலீஸார் உட்பட 10 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

Updated On : 13 ஜூலை, 2018 at 7:55 PM
கோப்புப்படம்
பகிர்:

உன்னாவ் பாலியல் வழக்கில் 3 போலீஸார் உட்பட 10 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் அருகே உள்ள பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் குல்தீப் சிங் செங்கர் இல்லத்துக்கு கடந்த ஆண்டு வேலை தேடி சென்ற போது தன்னை பாலியல் வன்கொடுமை ஆளாக்கியதாக 17 வயது சிறுமி புகார் அளித்திருந்தார். 

இந்த புகாரின் பேரில் போலீஸார் நடவடிக்கை எடுக்காததால், முதல்வர் ஆதித்யநாத் இல்லத்தின் முன் அந்த சிறுமி கடந்த ஏப்ரல் மாதம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதன்பிறகு இந்த வழக்கு விஸ்வரூபம் எடுத்தது. 

Advertisement

இதையடுத்து, குல்தீப் சிங் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. 

இந்நிலையில், இந்த வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், 3 போலீஸார், பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் குல்தீப் சிங் செங்கர், அவரது சகோதரர் அதுல் செங்கர் உள்பட 10 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

குற்றப்பத்திரிகையில் 120, 166, 167, 193, 201 மற்றும் 218 ஆகிய இந்திய குற்றவியல் சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், ஆயுதச் சட்டம் பிரிவு 3/25 கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.   

இதற்கிடையில், அந்த சிறுமியின் தந்தை ஆயுதங்கள் வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்த போதே உயிரிழந்தார்.

இதற்கு, குல்தீப் சிங் செங்கர் சகோதரர் வழக்கை திரும்ப பெறக் கூறி கடுமையாக தாக்கியதே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த மரண வழக்கிலும் விவகாரத்திலும் சிபிஐ 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.