இந்தியா

டிசிஐ நிறுவனத்தை மூடும் திட்டம் இல்லை

DIN

பொதுத் துறை நிறுவனமான இந்திய டிரட்ஜிங் கார்பரேஷன் (டிசிஐ) நிறுவனத்தை மூடும் திட்டம் இல்லை என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
விசாகப்பட்டினத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டிசிஐ, கடலில் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய கப்பல் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 
இந்த நிறுவனத்தின் 73 சதவீத பங்குகள் மத்திய அரசின் வசம் உள்ளது. இதனை விற்பதன் மூலம் அரசுக்கு ரூ.1,400 கோடி கிடைக்கும்.
இது தொடர்பாக மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறுகையில், டிசிஐ நிறுவனத்தை மூடும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை. அந்த நிறுவனத்தின் பங்குகளை விசாகப்பட்டினம், பாரதீப், நியூ மங்களூரு ஆகிய துறைமுகங்கள் வாங்க முன்வந்துள்ளன. 
இதற்கு அனுமதிகோரி மத்திய அமைச்சரவையை அணுகியுள்ளோம். உரிய அனுமதி கிடைத்தவுடன் பங்குகள் விற்பனை செய்யப்படும்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT