இந்தியா

பிரியங்கா சோப்ராவை டேக் செய்த காங்கிரஸ்: ட்விட்டரில் கலகலப்பு

ANI

செய்தித்தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதிக்கு பதிலாக பாலிவுட் நடிகை பிரிங்கா சோப்ராவை காங்கிரஸ் டேக் செய்தது ட்விட்டரில் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகளுக்கு உதவும் விதமாக மண் பரிசோதனைக் கூடங்கள் அமைத்து அதில் இயற்கையாகவும், எளிமையாகவும் விளையும் பயிர்கள் உள்ளிட்டவை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, திட்டம் ஏற்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், இதை விமர்சிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் வலைதளத்தில், மண் பரிசோதனைத் திட்டம் தொடர்பாக பிரதமர் மோடி, பொய் கூறுகிறார். முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தில் இதுபோன்ற 1,141 மண் பரிசோதனைக் கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று பதிவிட்டிருந்தது. 

ஆனால், இந்த பதிவில் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதிக்குப் பதிலாக பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை டேக் செய்தது. பின்னர் இந்தப் பதிவை ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டது. இது பெரும்பாலான ட்விட்டர் பயனாளர்களிடையே கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுடுமணலில் பொன்மகள்!

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

அச்சச்சோ..!

SCROLL FOR NEXT