இந்தியா

லோக் பால், லோக் ஆயுக்தா அமைக்கும் நடவடிக்கையை விரைவுபடுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

DIN


புது தில்லி: லோக் பால், லோக் ஆயுக்தா அமைக்கும் நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லோக் பால், லோக் ஆயுக்தா அமைப்பது தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, லோக் பால் மற்றும் லோக் ஆயுக்தா அமைப்புகளை ஏற்படுத்துவது தொடர்பான நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

லோக் பால் அமைப்பதற்கான தேர்வுக் குழு கூட்டம் வரும் 19ம் தேதி கூட உள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.

நாளை மறுநாள் தேர்வுக் குழு கூடி லோக்பால் ஏற்படுத்துவது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என்றும், லோக்பால் அமைக்க இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஜூலை 23ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

மத்திய அரசின் அறிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம், வழக்கை 24ம்  தேதிக்கு ஒத்திவைத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

SCROLL FOR NEXT