புது தில்லி: 'ஆசியாவின் நோபல்' என்று அழைக்கப்படும் ராமன் மகசேசே விருதுக்கு இந்த ஆண்டு இந்தியர்கள் இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிய கண்டத்தில் பல்வேறு துறைகளிலும் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு என பிலிப்பைன்ஸ் நாட்டின் சார்பாக ராமன் மகசேசே விருது வழங்கப்படுகிறது.இந்த விருதின் சிறப்புத் தன்மை கருதி இது 'ஆசியாவின் நோபல்' என்று புகழப்படுகிறது.
இவ்வாண்டு இந்த விருதுக்கு என மொத்தம் ஆறு பேர் தேர்வு செய்து வியாழனன்று அறிவிக்கப்பட்டுளார்கள். அவர்களில் இந்தியாவைச் சேர்ந்த மனநல மருத்துவர் பரத் வத்வானி மற்றும் பொறியாளர் சோனம் வாங்சுக் இருவரும் அடங்குவார்கள்.
இந்தியாவில் மனநலம் பாதிக்கப்பட்டு ஏறக்குறைய கைவிடப்பட்ட நிலையிலிருப்பவர்களின் நலனுக்காக தொடர்ந்து உழைத்து வருவதன் காரணமாக பரத் வத்வானிக்கும், இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் இருப்பவர்களின் சமுக முன்னேற்றத்துக்காக புதிய வழிகளில் பயிற்றுவித்தல் முறைகளை கையாண்டதற்காக சோனம் வாங்சுக்குக்கும் வழங்கப்படுவதாக விருதுத் தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.