இந்தியா

சிசிடிவி பொருத்தினால், தேர்தல் நேரத்தில் பணம் கொடுக்க பாஜக, காங்கிரஸூக்கு சிரமம் ஏற்படும்: கேஜரிவால்

தில்லியில் சிசிடிவி கேமராக்களை பொருத்தினால் மக்களவை தேர்தல் நேரத்தில் பாஜக மற்றும் காங்கிரஸுக்கு பணம் கொடுக்க கடினமாக இருக்கும் என்று முதல்வர் கேஜரிவால் குற்றம்சாட்டினார்.

DIN

தில்லியில் சிசிடிவி கேமராக்களை பொருத்தினால் மக்களவை தேர்தல் நேரத்தில் பாஜக மற்றும் காங்கிரஸுக்கு பணம் கொடுக்க கடினமாக இருக்கும் என்று முதல்வர் கேஜரிவால் குற்றம்சாட்டினார். 

தில்லியில் 1.5 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் திட்டத்தை ஆராய்வதற்கு ஆளுநர் பைஜால் கமிட்டி ஒன்றை அமைத்தார். இந்த கமிட்டி வெளியிட்ட அறிக்கையை கேஜரிவால் மக்கள் மத்தியில் கிழித்து போட்டார். இதையடுத்து, சிசிடிவி கேமராக்களை பொருத்துமாறு பொதுப்பணித்துறை கேஜரிவால் அனுமதி வழங்கினார்.  

இதுதொடர்பாக அரவிந்த் கேஜரிவால் டிவிட்டரில் செவ்வாய்கிழமை கருத்து தெரிவித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது,

"தில்லியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டால் தேர்தல் நேரங்களில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு பணம், மது உள்ளிட்டவற்றை வழங்குவதில் சிரமம் ஏற்படும். மக்களவை தேர்தலுக்கு முன்பு தில்லியில் சிசிடிவி கேமராக்களை பொருத்தாமல் பார்த்துக்கொள்ளுமாறு நேற்று பாஜக தலைவர் ஒருவர் ஆளுநரை கேட்டுக்கொண்டார்" என்றார். 

மற்றொரு டிவீட்டில், 

"சிசிடிவி கேமராக்களை ஏன் பொருத்தக்கூடாது என்பதற்கு பாஜக மற்றும் காங்கிரஸ் விளக்கம் தரவேண்டும். தில்லி முழுவதும் 1.5 லட்ச கேமராக்கள் பொருத்தப்படுவது ஆம் ஆத்மியின் தேர்தல் வாக்குறுதி" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது ஏன்?: தேஜஸ்விக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

மாயம் செய்கிறாய்... ரச்சனா ராய்!

வானவில்... சோபிதா துலிபாலா!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை விரைந்து அமல்படுத்த வலியுறுத்தல்

இளவஞ்சி... சஞ்சி ராய்!

SCROLL FOR NEXT