கர்நாடக அமைச்சரவை ஜூன் 4 அல்லது 5ல் விரிவாக்கம்: முதல்வர் குமாரசாமி
கர்நாடக மாநில அமைச்சரவை வரும் 4 அல்லது 5ம் தேதி விரிவாக்கம் செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.
பெங்களூர்: கர்நாடக மாநில அமைச்சரவை வரும் 4 அல்லது 5ம் தேதி விரிவாக்கம் செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் விழா குறித்து, முதல்வர் குமாரசாமி, துணை முதல்வர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வராவுடன், ஆளுநர் வஜுபாய் வாலாவை இன்று நேரில் சந்தித்து நேரம் கேட்டார்.
இது குறித்து அவர் கூறுகையில், கர்நாடக அமைச்சரவையை ஞாயிறன்று விரிவாக்கம் செய்யலாம் என்று நினைத்திருந்தோம். ஆனால், அன்றைய தினம் ஆளுநர் தில்லி செல்லவிருப்பதால், அவரிடம் நேரம் கேட்டுள்ளோம்.
Advertisement
திங்கட்கிழமை காலைதான் அவர் தில்லியில் இருந்து திரும்புகிறார். எனவே, ஜூன் 4 அல்லது 5ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் நிகழ்ச்சிக்கு நேரம் ஒதுக்குமாறு நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம் என்று கூறினார்.