இந்தியா

யோகி ஆதித்யநாத் அரசின் ஊழல்களினால் இடைத்தேர்தல்களில் தோல்வி: போர்க்கொடி தூக்கிய பாஜக எம்.எல்.ஏக்கள் 

UNI

லக்னௌ: யோகி ஆதித்யநாத் அரசின் ஊழல்களினால்தான் சமீபத்திய இடைத்தேர்தல்களில் பாஜக தோல்வி கண்டதாக,  அக்கட்சி எம்.எல்.ஏக்கள் இருவரே போர்க்கொடி தூக்கியுள்ள விவகாரம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பலவேறு மாநிலங்களில் 13 மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களின் முடிவுகள், வியாழனன்று வெளியானது. இதில் உத்தரப்பிரதேசத்தில் கைரானா மக்களவைத் தொகுதி மற்றும் நூர்பூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில் யோகி ஆதித்யநாத் அரசின் ஊழல்களினால்தான் சமீபத்திய இடைத்தேர்தல்களில் பாஜக தோல்வி கண்டதாக,  அக்கட்சி எம்.எல்.ஏக்கள் இருவரே போர்க்கொடி தூக்கியுள்ள விவகாரம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

அம்மாநிலத்தின் ஹர்தோய் மாவட்டத்தில் அமைந்துள்ள கோபமு சட்டப்பேரவைத் தொகுதி பாஜக எம்.எல்.ஏவாக இருப்பவர் ஷ்யாம் பிரகாஷ். அவர் இந்த தோல்வி பற்றிக் கூறியதாவது:

இந்த அரசின் நடவடிக்கைகள் குறித்து விவசாயிகள் அதிருப்தியுடன் இருக்கின்றனர். அத்துடன் வேறு சில காரணங்களும் உள்ளன. அரசு மீது எந்த தவறும் இல்லை. அதிகாரிகள்தான் தவறுக்கு காரணம்.

கடந்த அரசை விட இந்த அரசில் ஊழல்கள் அதிகமாக உள்ளது. இதுவே எனதுஅதிருப்திக்கு காரணம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல பலியா  மாவட்டத்தில் அமைந்துள்ள பெரியா சட்டப்பேரவைத் தொகுதி பாஜக எம்.எல்.ஏவாக இருப்பவர் சுரேந்திரா சிங். அவர் இந்த தோல்வி பற்றிக் கூறியதாவது:          

குறிப்பிட்ட இரு தொகுதிகளில் பிரதமர் மோடி பிரசாரம் செய்யவில்லை. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தான் பிரசாரம் செய்தார். எனவே முதல்வர் தனது தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார்.

ஒட்டு மொத்த அரசும் ஊழலில் ஈடுபட்டுள்ளது. மக்களுக்கு எந்த விதமான நலத்திட்டங்களின் பலனும் கிடைப்பதில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சிக்கு எதிராக அக்கட்சி எம்.எல்.ஏக்கள் இருவரே போர்க்கொடி தூக்கியுள்ள விவகாரம் அங்கு பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT