முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் விசாரித்துள்ளனர்: சிதம்பரம் குற்றச்சாட்டு
என் மீது குற்றம்சாட்டி எந்த முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யாத நிலையில், என்னை நேரில் அழைத்து விசாரித்துள்ளனர் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாமுதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் விசாரித்துள்ளனர்: சிதம்பரம் குற்றச்சாட்டு
என் மீது குற்றம்சாட்டி எந்த முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யாத நிலையில், என்னை நேரில் அழைத்து விசாரித்துள்ளனர் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
என் மீது குற்றம்சாட்டி எந்த முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யாத நிலையில், என்னை நேரில் அழைத்து விசாரித்துள்ளனர் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை இயக்குநரகத்தில் செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜரான பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அரசு ஆவணங்களில் முறைப்படி பதிவாகியுள்ள அனைத்து தகவல்களையும் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்தேன். என் மீது கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து முதல் தகவல் அறிக்கை எதையும் பதிவு செய்யவில்லை. எனினும், என்னை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். 6 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் எனது பதில்களை தவறுகள் இல்லாமல் பதிவு செய்து கொள்வதிலேயே 3 மணி நேரத்தை செலவிட்டனர். அதன் பிறகு எனது பதில்களை வாசித்து கையெழுத்துப் பெற்றுக் கொண்டனர் என்றார் அவர்.