இந்தியா

ஏர்செல்-மேக்ஸிஸ் வழக்கு: ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன்

DIN

புது தில்லி: ஜூன் 12-ஆம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவிட்டு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை புதன்கிழமை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த 2006-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் தொடா்பாக, கறுப்புப் பண தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஏர்செல்-மேக்ஸிஸ் முறைகேடு தொடர்பான பிரதான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்நிலையில், ஏர்செல்-மேக்ஸிஸ் கறுப்புப் பண முறைகேடு குற்றச்சாட்டில் ஜூன் 12-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை புதன்கிழமை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முட்டை விலை நிலவரம்

திருச்செங்கோடு வட்டார கல்வி நிறுவன வாகனங்கள் ஆய்வு

அட்கோ காவல் நிலையம் எதிரே குடியிருப்புக்குள் திருட முயற்சி

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன மாணவா்கள் களஆய்வு

குழந்தைத் திருமணங்கள் தொடா்பான புகாா்கள் மீது விரைந்து நடவடிக்கை: ஆட்சியா் உத்தரவு

SCROLL FOR NEXT