இந்தியா

பயனாளர்களின் தகவல்கள் பகிர்வு? பேஸ்புக்குக்கு மத்திய அரசு நோட்டீஸ்

பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை பகிர்ந்ததாக வெளிவந்த செய்தியை அடுத்து மத்திய அரசு பேஸ்புக்குக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

DIN

பேஸ்புக் நிறுவனம் ஆப்பிள், சாம்சங் போன்ற அலைபேசி நிறுவனங்களுடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி தனது பயனாளர்களின் தகவல்களை குறிப்பிட்ட அலைபேசி நிறுவனங்களுடன் பகிர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனால், பேஸ்புக் பயனாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

பேஸ்புக் நிறுவனம் பயனாளர்களின் தகவல்களுக்கு உத்தரவாதம் அளித்து தான் தொடங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது இந்த செய்தி வந்திருப்பது சர்ச்சையே ஏற்படுத்தியுள்ளது. அதனால், இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க பேஸ்புக் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

அதன்படி வரும் 20-ஆம் தேதிக்குள் பேஸ்புக் நிறுவனம் இந்த விவகாரம் குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும். பேஸ்புக் நிறுவனமும் இதுகுறித்து விளக்கம் அளிப்பதாக தெரிவித்துள்ளது. 

முன்னதாக, கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்திடம் பேஸ்புக் பயனாளர்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் குறித்தான தகவல்களை தேர்தலுக்காக பேஸ்புக் நிறுவனம் பகிர்ந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தண்ணீரில் பிரசவம்...

ஒரு கோயில்: இரு நாடுகளின் சண்டை

பெண்கள் அழகாய் இருக்க..

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

SCROLL FOR NEXT