இந்தியா

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை எண்ணுவதற்கு புதிய நவீன மெஷின் - ரிசர்வ் வங்கி கவர்னர்

DIN

பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் முறைகேடு, பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்திருப்பது உள்ளிட்ட பல்வேறு வங்கித் துறை தொடர்பான பிரச்னைகள் குறித்து ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கவர்னர் உர்ஜித் படேலிடம் நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு இன்று (செவ்வாய்கிழமை) ஆஜரானார்.

அப்போது ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல், வங்கிகளின் வாராக்கடன் உள்ளிட்ட பிரச்சனைகள் விரைவில் சரிசெய்யப்படும். நீரவ் மோடியின் மோசடி போன்ற சம்பவங்கள் திரும்பவும் நடக்காது என்றும் நாடாளுமன்ற நிலைக் குழு முன்பு அவர் தெரிவித்தார். 

மேலும் கிடைத்த தகவல்களின் படி, நாடாளுமன்ற நிலைக் குழு பணமதிப்பிழப்பு செய்த பிறகு திரும்ப வந்த பழைய நோட்டுகளின் எண்ணிக்கை எத்தனை என்பது குறித்து கேள்வி எழுப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

அதற்கு உர்ஜித் படேல் பதிலளிக்கையில், பழைய ரூபாய் நோட்டுகளை எண்ணுவதற்கு ரிசர்வ் வங்கி புதிய கருவிகளை வரவழைத்துள்ளது. ஏற்கனவே உள்ள கருவிகள் மற்றும் மனித வளம் பழைய நோட்டுகளை எண்ணுவதற்கு போதுமானதாக இல்லை. புதிய கருவி நோட்டுகளின் மதிப்பை வினாடிகளில் கணக்கிடும் அதுமட்டுமின்றி கள்ள நோட்டுகளையும் அது கண்டுபிடிக்கும் என்றார். 

வீரப்ப மொய்லி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக் குழுவில் பங்கேற்ற உறுப்பினர் விவரம்:

வீரப்ப மொய்லி (தலைவர்) (காங்கிரஸ்), முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (காங்கிரஸ்), நிஷிகாந்த் டுபே (பாஜக), ரத்தன் லால் கடாரியா (பாஜக), மஹ்தப் (பிஜூ ஜனதா தளம்), பிரேம் காஸ் ராய் (எஸ்டிஎஃப்), சௌகதா ராய் (திரிணாமுல்), தினேஷ் திரிவேடி (திரிணாமுல்) மற்றும் ஜோதிராதித்யா சிண்டியா (காங்கிரஸ்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

SCROLL FOR NEXT