இந்தியா

ரூ.134க்கு பதில் ரூ.3.81 லட்சம் வந்த வீட்டுக்கான மின் கட்டண பில்?!

DIN


ஜூன் மாதம் தனது வீட்டுக்கு வந்த மின் கட்டண பில்லைப் பார்த்து அதிர்ந்து போனார் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்வரூபா என்ற பெண்மணி.

அந்த பில்லில், அவர் மே 10ம் தேதி முதல் ஜூன் 9ம் தேதி வரையிலான கால கட்டத்தில் 40,059 யூனிட்டுகளை பயன்படுத்தியுள்ளதாகவும், அதற்காக அவருக்கு ரூ.3,79,087 கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், மின் கட்டணத்துக்கான வரியாக ரூ.2,403ம் விதிக்கப்பட்டிருந்தது. எல்லாம் கூட்டி கிட்டத்தட்ட ரூ.4 லட்சம் அளவுக்கு மின் கட்டணம் வந்துள்ளது.

இது குறித்த தகவலும், புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, உடனடியாக தங்களது தவறை செய்து செய்தனர் மின்சார வாரிய ஊழியர்கள்.

அதாவது, ஒரு மாதத்தில் 63 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியதற்கு, ஸ்வரூபாவுக்கு ரூ.134 மின் கட்டணம் விதிப்பதற்கு பதிலாக, தவறுதலாக ரூ.4 லட்சம் அளவுக்கு மின் கட்டணம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

யூனிட்டை பதிவு செய்யும் போது தவறுதலாக சில எண்கள் பதியப்பட்டதால் இந்த தவறு நேர்ந்திருக்கலாம் என்று ஊழியர்கள் கூறியுள்ளனர்.

அந்த பெண்ணின் இதயம் பலவீனமாக இருந்திருந்தால் என்னவாகியிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT