இந்தியா

வாஜ்பாய்க்கு தொடர்ந்து சிகிச்சை

DIN

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியூ) தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் குழு தொடர்ந்து பரிசோதித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமரும், பாஜக முதுபெரும் தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் (93) கடந்த திங்கள்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்னை ஏற்பட்டுள்ளதால், டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிய அளவில் மூச்சுத் திணறலும் இருப்பதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்து எய்ம்ஸ் இயக்குநர் ரண்தீப் குலிரியா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வாஜ்பாய் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே வைக்கப்பட்டுள்ளார். இப்போது, அவரது உடல்நிலையில் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நிலையை மருத்துவர்கள் குழு தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறது. அடுத்த சில நாள்களில் அவரது உடல்நிலை முழுமையாக சீரடையும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
வாஜ்பாய்க்கு நீரிழிவு நோய் உள்ளது. அவருக்கு ஒரு சிறுநீரகம் மட்டுமே செயல்பட்டு வருகிறது. 2009-ஆம் ஆண்டு பக்கவாதம் ஏற்பட்டு, நினைவுத்திறனும், உடல் செயல்பாடுகளும் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால், கடந்த பல ஆண்டுகளாக பொது நிகழ்ச்சிகள் எதிலும் அவர் பங்கேற்கவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT