முகப்பு
இந்தியா

'டிஜிட்டல் இந்தியா' தங்கள் கிராமத்தை எப்படி மாற்றியது: மோடியிடம் பகிர்ந்து கொண்ட இளைஞர்

டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்து விடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி பயனாளர்களிடம் கலந்துரையாடினார்.

Updated On : 15 ஜூன், 2018 at 11:10 AM
பகிர்:


புது தில்லி: டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்து விடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி பயனாளர்களிடம் கலந்துரையாடினார்.

அப்போது பேசிய மோடி, நாடு முழுவதும் உருவாக்கப்பட்ட 3 லட்சத்துக்கும் மேலான பொது சேவை மையங்கள் மூலம், பொதுமக்களுக்கான தேவைகள் டிஜிட்டல் முறையில் எளிதாகக் கிடைக்கப்பெற்றதுடன் வேலை வாய்ப்பையும் உருவாக்கியது.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பொதுமக்களுக்கு குறிப்பாக ஊரக மற்றும் கிராமப்புற மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காகவே கொண்டு வரப்பட்டது பொது சேவை மையம்.

Advertisement

தற்போது பொது சேவை மையங்கள் மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது உள்ளிட்டவற்றைக் கூட பொதுமக்கள் செய்து கொள்ள முடிகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பம் என்பது குறிப்பிட்ட ஒரு சிலருக்கானது என்ற நிலையை மாற்றி அனைத்து பாமர மக்களுக்கும் பயனளிக்க வழிவகைக் காணப்பட்டுள்ளது என்றார்.

நிகழ்ச்சியின் போது விடியோ கான்பரன்சிங் மூலம் மோடியிடம் பேசிய கிராமப்புற இளைஞர், தங்களது கிராமத்துக்கு தற்போது இன்டெர்நெட் வசதி கிடைக்கப் பெற்றிருப்பதாகவும், ஆன்லைன் மூலமாகவே தங்களது பிள்ளைகள் பல விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பும் கிடைத்திருப்பதாகவும் கூறினார்.

அப்போது அவரிடம் பேசிய மோடி, இந்த வசதியை வர்த்தகங்களுக்கும், கடை வியாபாரிகளுக்கும் பரப்பவும், அவர்களை பிம் செயலியை பதிவிறக்கம் செய்து பயனடையுமாறும் வேண்டிக் கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியின் போது மயிலாடுதுறையில் உள்ள சிறு தொழில் அதிபர்களிடமும் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.