இந்தியா

பிரதமரின் உடற்பயிற்சி சவாலை ஏற்ற கேரள ஐபிஎஸ் அதிகாரி 

DIN

திருவனந்தபுரம்: பிரதமா் மோடி விடுத்துள்ள உடற்பயிற்சி சவாலை கேரள மாநிலத்தைச் சோ்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் ஏற்றுக் கொண்டுள்ளாா்.

திருச்சூா் நகர காவல் ஆணையரான ஜி.எச்.யத்தீஷ் சந்திரா, ‘‘பிரதமரின் உடற்பயிற்சி சவாலை ஏற்பதை பெருமையாகக் கருதுகிறேன்’’ என்று தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளாா். மேலும், தனது உடற்பயிற்சி விடியோவையும் முகநூல் பக்கத்தில் அவா் பதிவேற்றம் செய்துள்ளாா்.

மத்திய விளையாட்டுத் துறைற அமைச்சா் ராஜ்யவா்த்தன் ராத்தோா், உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், தனது உடற்பயிற்சி விடியோவை சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டாா். இதேபோன்று, உடற்பயிற்சி விடியோவை வெளியிட வேண்டும் என்று சில பிரபலங்களுக்கு அவா் சவால் விடுத்தாா். 

அதன் தொடா்ச்சியாக, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தனது உடற்பயிற்சி விடியோவை வெளியிட்டதுடன், பிரதமா் மோடிக்கு சவால் விடுத்தாா். அந்த சவாலை ஏற்றுக் கொண்ட பிரதமா் மோடி, கடந்த வாரம் தனது உடற்பயிற்சி விடியோவை வெளியிட்டாா்.

அத்துடன், கா்நாடக முதல்வா் குமாரசாமிக்கும், விளையாட்டுத் துறையைச் சோ்ந்தவா்களுக்கும், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் மோடி சவால் விடுத்தாா். இந்நிலையில், அவா் விடுத்த சவாலை ஏற்று ஜி.எச்.யதீஷ் சந்திரா தனது உடற்பயிற்சி விடியோவை வெளியிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

SCROLL FOR NEXT