முகப்பு
இந்தியா

தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதி: பிரகாஷ் ஜாவடேகர்

தமிழ் உள்ளிட்ட மொழிகள் நீக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் திங்கள்கிழமை மறுப்பு தெரிவித்துள்ளார்.

Updated On : 18 ஜூன், 2018 at 3:43 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:28 PM

தமிழ் உள்ளிட்ட மொழிகள் நீக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் திங்கள்கிழமை மறுப்பு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற சிபிஎஸ்இ சார்பில் நடத்தப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 

இந்த தேர்வு கடந்த ஆண்டு வரை 20 மொழிகளில் எழுதலாம் என்றிருந்த நிலையில், இம்முறை தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 17 மொழிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

Advertisement

இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழ் உள்ளிட்ட 20 மொழிகளில் நடத்த சிபிஎஸ்இ-க்கு உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.