ஒடிசா வங்கியில் கொள்ளையர்கள் அட்டகாசம்: துப்பாக்கி முனையில் ரூ.45 லட்சம் கொள்ளை
ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்குள் புகுந்த கொள்ளையர்கள், துப்பாக்கி முனையில் ரூ.45 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
ரூர்கேலா: ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்குள் புகுந்த கொள்ளையர்கள், துப்பாக்கி முனையில் ரூ.45 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
இன்று காலை, வங்கிக்குள் புகுந்த அடையாளம் தெரியாத 7 பேர், வங்கி மேலாளரை துப்பாக்கி முனையில் மிரட்டி பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
பணத்தைக் கொள்ளையடித்த கொள்ளையர்கள், எந்த தடையும் இன்றி வங்கியில் இருந்து தப்பித்துச் சென்றனர். இது குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement