இந்தியா

மத்திய அரசின் தலைமைப்  பொருளாதார ஆலோசகர் ராஜிநாமா

மத்திய அரசின் தலைமைப்  பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் தனது பதிவியை ராஜிநாமா செய்துள்ளார்.

DIN

புது தில்லி: மத்திய அரசின் தலைமைப்  பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார். 

மத்திய அரசின் தலைமைப்  பொருளாதார ஆலோசகராக அரவிந்த சுப்பிரமணியம் அக்டோபர் 16, 2014 பொறுப்பேற்றார். அவருடைய 3 ஆண்டுகால பதவி கடந்த ஆண்டு முடிந்ததை அடுத்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அவருடைய பதவிக்காலத்தை நீட்டித்தார். 

இந்நிலையில், அவர் இன்று தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அருண் ஜேட்லியிடம் விடியோ கான்ஃபெரன்ஸிங் மூலம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அருண் ஜேட்லி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் 'நன்றி அரவிந்த்' என்று கூறி  நீண்ட பதிவை பதிவிட்டுள்ளார். 

அரவிந்த் தனது தனிப்பட்ட  குடும்ப காரணங்களுக்காக அமெரிக்க செல்லவேண்டும் என்பதால் இந்த பதவியில் இருந்து விலகுவதாக அவர் ஜேட்லியிடம் தெரிவித்துள்ளார். 

அரவிந்த சுப்பிரமணியம் விமரிசனம்

அரவிந்த் சுப்பிரமணியம் தலைமைப் பொருளாதார ஆலோசகராக பொறுப்பேற்ற போது, இந்தியாவில் எப்படி வணிகம் மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவுக்கு ஆலோசனை வழங்கியவர் தான் இந்த அரவிந்த் சுப்பிரமணியம் என்ற விமரிசனம் அவர் மீது எழுந்தது.

அதன்பிறகு பாஜகவின் மூத்த தலைவர் அரவிந்த் சுப்பிரமணியத்துக்கு எதிராக இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டார்.

அதற்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அரவிந்த் சுப்பிரமணியம் மீது மத்திய அரசுக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது என்று ஆதரவுக் கரம் நீட்டினார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT