இந்தியா

ஃபிடல் காஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம் நாத் கோவிந்த் மரியாதை

DIN

கியூபாவின் சாண்டியாகோ டி கியூபா நகரில் அமைந்துள்ள அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் மரியாதை செலுத்தினார்.
குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், கிரீஸ், சூரினாம், கியூபா ஆகிய 3 நாடுகளுக்கு கடந்த16-ஆம் தேதி சுற்றுப் பயணம் தொடங்கினார். 
இதில் கிரீஸ், சூரினாம் ஆகிய நாடுகளில் பயணத்தை முடித்துக் கொண்ட அவர், கியூபாவிற்கு வியாழக்கிழமை வந்தார். பின்னர், சாண்டியாகோ டி கியூபா நகரில் அமைந்துள்ள அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவின் நினைவிடத்தில் ராம் நாத் கோவிந்தும் அவரது மனைவி சவீதா கோவிந்
தும் மரியாதை செலுத்தினர்.
இதுதொடர்பாக ராம் நாத் கோவிந்த் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ஃபிடல் காஸ்ட்ரோ, இந்தியாவின் சிறந்த நண்பர் என்பதுடன் சர்வதேச அரங்கில் வளரும் நாடுகளுக்காக குரல் கொடுத்தவர். அவரது தலைமை, பல லட்சம் பேருக்கு தூண்டுதலாக இன்னமும் இருந்து வருகிறது. அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் நிகழ்வுடன் எனது கியூபா பயணம் தொடங்கியதை கௌரமாக கருதுகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
இப்பயணத்தின்போது, கியூபா அதிபர் மிகுல் டிஸா கேனல் பெர்முடஸுடன் ராம் நாத் கோவிந்த் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
கியூபாவை கட்டமைத்தவராக போற்றப்படும் காஸ்ட்ரோ, கடந்த 2016-இல் தனது 90-ஆவது வயதில் காலமானார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT