இந்தியா

மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை: வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது

நாடு முழுவதும் பெரும்பாலான நகரங்களில் வெப்பச் சலனம் காரணமாக கனமழை பெய்து வருகிறது. ஆங்காங்கே புழுதிப் புயல் ஏற்படுகிறது.

Raghavendran

நாடு முழுவதும் பெரும்பாலான நகரங்களில் வெப்பச் சலனம் காரணமாக கனமழை பெய்து வருகிறது. ஆங்காங்கே புழுதிப் புயல் ஏற்படுகிறது.

இந்நிலையில், புவனேஸ்வர், மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. 

சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த 2 தினங்களுக்கு கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக ஒடிஸாவின் பெரும்பாலான பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

SCROLL FOR NEXT