இந்தியா

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் - ஜூலை 18 தொடக்கம்

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 18-ஆம் தேதி தொடங்கி 18 நாட்களுக்கு ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

DIN

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் வரும் ஜூலை 18-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் ஆனந்த் குமார் தெரிவித்தார். இந்த கூட்டத்தொடரில் முத்தலாக் உள்ளிட்ட பல மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. 

கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பெரும்பாலான நாட்கள் காவிரி விவகாரம், ஆந்திர மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட பிரச்னைகளால் முடங்கப்பட்டது. அதனால், இந்த கூட்டத்தொடர் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  

இந்த கூட்டத்தொடர் எந்தவித அமளியும் இல்லாமல் நடைபெற எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை அரசு கோரியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT