முகப்பு
இந்தியா

ஐஎன்எக்ஸ் மீடியா ஊழலை நிகழ்த்தியவர் ப.சிதம்பரம்: பாஜக குற்றச்சாட்டு

ஐஎன்எக்ஸ் மீடியா ஊழலுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு அதனை நிகழ்த்தியதே முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்தான் என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

ஐஎன்எக்ஸ் மீடியா ஊழலுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு அதனை நிகழ்த்தியதே முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்தான் என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி தம்பதிக்கு சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு விதிகளை மீறி வெளிநாட்டு முதலீட்டைப் பெற்றுத்தந்து, பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்ததுள்ளனர்.
இந்நிலையில், தில்லி செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தித் தொடர்பான ஜி.வி.எல்.நரசிம்மராவ் கூறியதாவது:
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு என்பது மிகத்தீவிரமான பொருளாதாரக் குற்றம். இந்த விவகாரத்தில் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்துக்கும் நேரடித் தொடர்பு உண்டு என்பது, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி தெரிவித்துள்ள வாக்குமூலத்தில் இருந்தே தெரிய வருகிறது. ஏனெனில், ஐஎன்எக்ஸ் மீடியா ஊழலுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு அதன் முன்னின்று நடத்தியதே ப.சிதம்பரம்தான் என்று இந்திராணி முகர்ஜி தெரிவித்துள்ளார்.
கார்த்தி சிதம்பரம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறப்படுவதை ஏற்க முடியாது. சிபிஐ, அமலாக்கத்துறை ஆகிய விசாரணை அமைப்புகள் பல கட்டங்களாக விசாரணை நடத்திதான் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. இந்த முறைகேடு குறித்து எழுந்துள்ள அனைத்துக் கேள்விகளுக்கும் காங்கிரஸ் கட்சி பதிலளிக்க வேண்டும்.
தனது தந்தையின் நிதியமைச்சர் பதவியை தவறாகப் பயன்படுத்தி, ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு ஆதரவாக செயல்பட்ட கார்த்தி சிதம்பரம் தனக்கும், தனது நிறுவனத்துக்கும் அவர்கள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல கோடி ரூபாய் ஆதாயமடைந்துள்ளார் என்றார் அவர்.
கபில் சிபல் பதில்: இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில் கூறியது: 
கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பது முற்றிலும் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கைதான். வேறு வழி இல்லாத நிலையில் இந்திராணி முகர்ஜியிடம் இருந்து ஒரு வாக்குமூலத்தை சிபிஐ பெற்றுள்ளது. இந்திராணி ஏற்கெனவே தனது மகள் வழக்கில் குற்றவாளியாக இருக்கிறார்.
கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக எந்த வலுவான ஆதாரமும் இல்லாத நிலையில், இப்போது வலுக்கட்டாயமாக ஒரு ஆதாரத்தை உருவாக்கி அவரைக் கைது செய்துள்ளனர். இதன் மூலம் சிபிஐ அரசின் கூண்டுக்கிளியாக இல்லாமல், அரசின் விருப்பத்துக்கு ஏற்ப பாடும் பறவையாக உள்ளது என்றார் அவர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →