இந்தியா

பிஎன்பி வங்கி மோசடி: ரூ. 1217 கோடி மதிப்புள்ள மெகுல் சோக்ஷியின் சொத்துக்கள் பறிமுதல்! 

DIN

புதுதில்லி: பிஎன்பி வங்கி மோசடியில் ஈடுபட்டவர்களில் ஒருவரான மெகுல் சோக்ஷியின் ரூ. 1217 கோடி மதிப்புள்ள  சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. 

பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் இருந்தும், அதன் பெயரைப் பயன்படுத்தி வேறு சில வங்கிகளிடம் இருந்தும் தொழிலதிபர் நீரவ் மோடி ரூ.12,717 கோடி கடன் பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தவில்லை. தற்போது விசாரணை நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்காக அவரும் அவரது தொழில் கூட்டாளியும், உறவினருமான மெகுல் சோக்ஷி ஆகிய இருவரும் வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ளார்கள். 

தற்பொழுது பிஎன்பி மோசடி வழக்கில் மெகுல் சோக்ஷி மற்றும் அவருடைய நிறுவனங்களுக்கு சொந்தமான ரூ. 1,217 கோடி மதிப்பிலான 41 சொத்துக்களை நாடு முழுவதும் அமலாக்கப்பிரிவு பறிமுதல் செய்து உள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் இந்த பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

மும்பையில் 15 பிளாட்கள், 17 அலுவலக இடங்கள், கொல்கத்தாவில் உள்ள வணிக வளாகம், உத்தரப்பிரதேச மாநிலம் அலிபாக்கில் உள்ள 4 ஏக்கர் அளவிலான பண்ணை வீடு, நாசிக், நாக்பூர், பான்வெல், தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் மற்றும் தமிழ்நாட்டில் விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஏக்கர் கணக்கிலான நிலங்கள் என மொத்தம் 41 சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்கப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT