மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் பாரிக்கர்
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், சிகிச்சை முடிந்து வியாழக்கிழமை வீடு திரும்பினார்.
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், சிகிச்சை முடிந்து வியாழக்கிழமை வீடு திரும்பினார்.
நீர்ச்சத்து குறைபாடு காரணமாக, உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், பனாஜியில் உள்ள கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாரிக்கர் கடந்த 25-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். உடல் நலம் தேறியதையடுத்து, மருத்துவமனையில் இருந்து அவர் வியாழக்கிழமை வீடு திரும்பினார்.
இதுகுறித்து அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 'நான் நலமுடன் வீடு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது; நலம்பெற விரும்பிய அனைவருக்கும் நன்றி' என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, கணைய அழற்சி பாதிப்புக்காக, மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் கடந்த மாதம் 15-ஆம் தேதி பாரிக்கர் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 22-ஆம் தேதி வீடு திரும்பினார். அதைத் தொடர்ந்து, கோவா சட்டப் பேரவையில் மாநில அரசின் நிதி நிலை அறிக்கையை அன்றைய தினம் அவர் தாக்கல் செய்தார். பாரிக்கரின் உடல் நலம் கருதி, கோவா சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் 4 நாள்களாகக் குறைக்கப்பட்டது.