தமிழகத்தில் 5 இடங்களில் பெட்ரோலிய எண்ணெய் மண்டலங்கள் அமைக்க பரிந்துரை: மத்திய அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் 5 இடங்களில் பெட்ரோலிய எண்ணெய் மண்டலங்கள் அமைக்க எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு பரிந்துரை செய்திருப்பதாக மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் தகவல் தெரிவித்துள்ளார்.
புதுதில்லி: தமிழகத்தில் 5 இடங்களில் பெட்ரோலிய எண்ணெய் மண்டலங்கள் அமைக்க எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு பரிந்துரை செய்திருப்பதாக மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் தகவல் தெரிவித்துள்ளார்.
நாட்டில் புதிய பெட்ரோலிய எண்ணெய் மண்டலங்கள்அமைப்பது தொடர்பான உறுப்பினர் ஒருவரின் கேள்வி ஒன்றுக்கு, மாநிலங்களவையில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் திங்களன்று எழுத்துப் பூர்வமாக பதிலளித்தார்.
அதில் அவர் கூறியிருந்ததாவது:
Advertisement
தமிழகத்தில் 5 இடங்களில் பெட்ரோலிய எண்ணெய் மண்டலங்கள் அமைக்க எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. எண்ணூர், ஆசனூர், தருமபுரி, நெல்லை மற்றும் சென்னை அருகே வல்லூர் ஆகிய இடங்கள் பெட்ரோலிய எண்ணெய் மண்டலங்கள் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.