இந்தியா

அருண் ஜேட்லி, ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவை வேட்பாளர்களாக அறிவிப்பு

Raghavendran

மாநிலங்களவையில் காலியாக உள்ள இடங்களுக்கான வேட்பாளர்களை பாஜக புதன்கிழமை அறிவித்துள்ளது.

விரைவில் காலியாக உள்ள மாநிலங்களை வேட்பாளர்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து பாஜக சார்பில் தற்போது மத்திய அமைச்சர்களாக உள்ள அருண் ஜேட்லி மற்றும் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் வேட்பாளர்களாக பாஜக நியமித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியும், பிகார் மாநிலத்தில் இருந்து மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அமைச்சர்களாக உள்ள இவர்களது மாநிலங்களவை பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ள காரணத்தால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் பாஜக தரப்பில் ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தில் இருந்து ஜே.பி.நட்டா, மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருந்து தவார்சந்த் கெலாட், ராஜஸ்தானில் இருந்து புபேந்தர் யாதவ், குஜராத்தில் இருந்து மாந்தவ்யா ரூபாலா, ஹிமாச்சலப்பிரதேசத்தில் இருந்து ஜகத்பிரதா நட்டா உள்ளிட்டோர் பாஜக தரப்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

SCROLL FOR NEXT