இந்தியா

அமிதாப் பச்சனுக்கு திடீர் உடல் நலக் குறைவு

DIN

ராஜஸ்தானில் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருந்த பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு கடுமையான முதுகு வலி மற்றும் கழுத்து வலி ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து மும்பையில் இருந்து மருத்துவர் குழு விரைந்து சென்று அவருக்கு சிகிச்சையளித்தது.
தற்போது அமிதாப் நலமுடன் இருப்பதாக அவரது மனைவி ஜெயா பச்சன் தெரிவித்துள்ளார். முன்னதாக, தனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக அமிதாப் சுட்டுரையில் (டுவிட்டர்) பதிவிட்டிருந்தார். அது, ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை உருவாக்கியது. விஜய் கிருஷ்ண ஆச்சார்யா இயக்கத்தில் தயாராகி வரும் 'தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' என்ற திரைப்படத்தில் அமிதாப் பச்சன் நடித்து வருகிறார். அதற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்று வரும் படிப்பிடிப்பில் கலந்துகொள்ள அவர் சென்றுள்ளார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை அமிதாப் ஒரு சுட்டுரைப் பதிவை வெளியிட்டார்.
'எனது உடல் நிலையைப் பரிசோதிக்கவும், ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவும் மருத்துவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்' என்று அதில் அவர் தெரிவித்திருந்தார். இதைப் பார்த்த ரசிகர்களும், திரைத் துறையினரும் அமிதாபின் உடல் நிலை குறித்து அச்சம் தெரிவித்தினர்.
அதன் தொடர்ச்சியாக, அவர் தங்கியிருந்த ஹோட்டல் முன்பு பத்திரிகையாளர்களும், ரசிகர்களும் திரண்டனர். மாநில முதல்வர் வசுந்தரா ராஜே உள்ளிட்டோர் அமிதாப் விரைவில் குணமடைய வேண்டும் என சுட்டுரையில் தெரிவித்தது மேலும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. இறுதியில் அவரது மனைவி ஜெயா பச்சன், அதுதொடர்பாக விளக்கமளித்தார். அதிக எடை கொண்ட உடைகளை அணிந்து கொண்டு நடித்ததால் அமிதாபுக்கு முதுகு வலி மற்றும் கழுத்து வலி ஏற்பட்டதாகவும், தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் ஜெயா பச்சன் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT